மாணவியின் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு பாடம் எடுத்த பேராசிரியர்!

அமெரிக்காவில் கவினெட் என்ற பிரபல கல்லூரியில் பேராசிரயராக பணிபுரிந்து வருபவர் ரமடா சிசோகோ சிஸ். அவருடைய வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவி ஒருவர் அடிக்கடி வகுப்பிற்கு வராமல் இருப்பதை அவர் கண்டுப்பிடித்துள்ளார். இதனால்மாணவியைதொடர்புக் கொண்டு பேசிய ரமடா கல்லூரிக்கு வராமைக்கான காரணத்தை அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த மாணவி தனக்கு குழந்தை ஒன்று உள்ளதாகவும். அதனை பராமரிக்க யாரும் இல்லாத காரணத்தால் தன்னால்சரியான முறையில் கல்லூரிக்கு வரமுடியாததையும் அவர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து பேராசிரியர் ரமடா நாளை ஒருமுக்கிய வகுப்பு உள்ளது, உனது குழந்தையையும் அழைத்து கல்லூரிக்கு வாருங்கள் என கூறியுள்ளார். பேராசிரியை அனுமதி அளித்ததால் கைக்குழந்தையுடன் வகுப்பிற்குள் மாணவி வந்தார்.

ஆனாலும், குழந்தை மாணவியின் கையில் இருந்தால் அவரால் பாடத்தை கவனிக்க முடியாது என்பதை உணர்ந்த பேராசிரியை ரமடா, மாணவியின் குழந்தையை வாங்கி அவர் கொண்டு வந்த லேப் கோட்டில் முதுகில் கட்டிக்கொண்டு பாடம் எடுத்துள்ளார். குழந்தையை கிட்டதக்க 3 மணி நேரம் முதுகில் தாங்கிக்கொண்டு பேராசிரியை ரமடா பாடம் எடுத்ததார். மேலும் அந்த புகைப்படத்தை ரமடாவின் மகள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், " 3 மணி நேரமாக என் அம்மா, அவரது மாணவியின் குழந்தையை முதுகில் தாங்கிக்கொண்டு பாடம் எடுத்துள்ளார். என் அம்மா தான் எனக்கு எப்போதும் முன் உதாராணம். அவர்கிடைத்தது எனது அதிர்ஷ்டம் " என பெருமிதத்துடன் அவர் பதிவிட்டுள்ளார்.

teacher
இதையும் படியுங்கள்
Subscribe