Skip to main content

துணி துவைக்கும் சிம்பன்ஸி - வைரலாகும் புகைப்படம்!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

மனிதன் குரங்களில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், மனிதக்  குரங்குகளாக சிம்பன்சி அதிக அறிவுள்ளதாகவும் புத்திசாலி விலங்காகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், சீனா நாட்டில் உள்ள விலங்கு அருங்காட்சியகத்தில்  வளர்ந்து வரும் சிம்பன்சி ஒன்று, அழுக்கான துணிகளை துவைத்துப் போட்டுள்ளது. இந்த சம்பவம் அங்குள்ளவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

gh



தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் என்ற பகுதியில் உள்ள  மிருகக் காட்சி சாலையில் வளர்க்கபட்டுவரும் சிம்பன்சி ஒன்று, பராமரிப்பாளர் தனது துணிகளை துவைத்து போடுவதை பார்த்துக் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. காப்பாளர் துவைப்பதைப் பார்த்து அப்படியே செய்த சிம்பன்சி, சுமார் அரை மணிநேரம் துணியை துவைத்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

கார் ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநர்; கதறி அழுத மனைவி

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Lorry driver hits car driver; A crying wife

 

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ரேடியல் சாலையில் கார் ஒன்றின் மீது லாரி மோதிய சம்பவத்தில் கார் ஓட்டுநருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், லாரி ஓட்டுநர் கார் ஓட்டுநரை அவருடைய மனைவி முன்பே தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ரேடியல் சாலையில் லாரி மோதியதில் கார் சேதமடைந்தது. இதனால் கார் ஓட்டுநர் லாரி ஓட்டுநரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது லாரி ஓட்டுநர் அலட்சியமாக பதில் சொன்னதாலும், ஆபாசமாக பேசியதாலும் லாரியின் சாவியை கார் ஓட்டுநர் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த நபரின் மனைவி முன்பே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்த நபரின் மனைவி கதறி அழுது கூச்சலிட்ட நிலையிலும் அவர் மீது தாக்குதல் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.