Advertisment

பார்க்கும் இடமெல்லாம் நண்டுகள்... பாதை அமைத்து கொடுத்த அரசாங்கம்

Christmas Island Millions red crab

ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்மஸ் தீவு சிவப்பு நிற நண்டுகளால் வண்ணமயமாகவும், ரம்மியமாகவும்காட்சியளிக்கிறது.

Advertisment

காடுகளில் வசிக்கும் சிவப்பு நிற நண்டுகள், இனப்பெருக்கக் காலத்தில் கடலுக்கு இடம் பெயர்தலைவழக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள்தான் நண்டுகளின் இனப்பெருக்கக் காலகட்டம். அதனால்சிவப்பு நிற நண்டுகள் தங்களின் இனப்பெருக்கத்திற்காகக் கடலுக்கு இடம் பெயர்ந்து, அங்கு முட்டையிட்டு, மீண்டும் தனது வசிப்பிடமான காட்டிற்குத்திரும்புவதை வழக்கமாக வைத்து வருகிறது.

Advertisment

அப்படி நண்டுகள் இடும் முட்டைகள் பாதி மீன் மற்றும் கடல் வாழ்உயிரினங்களுக்கு உணவாகிவிடும். மீதமுள்ள முட்டைகள் மட்டுமே குஞ்சு பொரித்து தனது இருப்பிடமான காட்டிற்குச் செல்லும். அந்த வகையில், தற்போது நண்டுகளின் இனப்பெருக்கக் காலகட்டம் என்பதால் சிவப்பு நிற நண்டுகள் கடலை நோக்கி படையெடுத்து வருகிறது.

Christmas Island Millions red crab

இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் லட்சக்கணக்கான நண்டுகள் இடம்பெயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசு நண்டுகளின் பாதுகாப்பிற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நண்டுகள் இடம் பெயர்தலுக்காகப் பாதை அமைத்துள்ளது. மேலும், ஏராளமான சிவப்பு நண்டுகள் சாலையிலும்பயணிப்பதால் அங்கு சில இடங்களில் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள்சாலையோரம் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டுலட்சக்கணக்கான நண்டுகள் ஒரே நேரத்தில் அணிவகுத்து செல்வதைப் பார்த்துக் கண்டுகளித்து வருகின்றனர்.

Australia govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe