ஜப்பானில் மீன் அருங்காட்சியகத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தநபர் மீன்களுக்கு உணவளித்தது பார்வையாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் யோகோஹாமா பகுதியில் சுரங்கப்பாதை வடிவிலான மீன் அருங்காட்சியகம் உள்ளது. இங்குள்ள மீன்களுக்கு உணவளிக்கும் நபர் வழக்கமான உடையைத் தவிர்த்து கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து உணவளித்தார். அதேபோல், பென்குயின்களுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்தேபணியாளர்கள் உணவளித்தனர். இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. அதனை புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர் பார்வையாளர்கள்.