ADVERTISEMENT

பூமியில் விழப்போகும் சீன விண்கலம்!! -அமெரிக்கா அதிர்ச்சி

11:27 AM Jun 26, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனாவால் அனுப்பப்பட்ட டியான்காங் 2 என்ற விண்வெளி ஆய்வு மையம் செயலிழந்துள்ளதால் எப்போது வெண்டுமானாலும் பூமியில் விழலாம் என அமெரிக்கா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு சீனாவால் டியான்காங் 2 என்ற விண்வெளி ஆய்வு மையம் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அந்த விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு வந்தது. ஆனால் டியான்காங் 2 தற்போது முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் டியான்காங் 2 விரைவில் பூமியில் விழும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதேபோல் இதற்கு முன்னதாக ஏற்கனவே சீனாவால் அனுப்பப்பட்டு புவிவட்ட பாதையில் கண்காணிக்கப்பட்டுவந்த டியான்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு மையம் தனது செயல்பாட்டை இழந்து கடந்த ஏப்ரல் மாதம் பூமியில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT