Advertisment

அவென்ஜர்ஸ் படம் பார்த்து கதறி அழுத இளம் பெண்: மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி...

மார்வெல் திரைப்பட வரிசைகளில் அவென்ஜர்ஸ் பாகங்கள் மிக முக்கியமானவை. ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற இந்த அவென்ஜர்ஸ் படங்களின் கடைசி பாகமான "அவென்ஜர்ஸ் எண்டு கேம் " திரைப்படம் கடந்தவாரம் உலகம் முழுவதும் வெளியாகி பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

Advertisment

chinese girl admitted in hospital because of avengers endgame movie

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கடைசி பாகமான இதில் மிக முக்கியமான அவென்ஜரான அயர்ன் மேன் கடைசியில் இறப்பதுபோல கதையமைக்கப்பட்டிருக்கும். அவரின் அந்த கடைசி காட்சி அனைத்து மார்வெல் ரசிகர்களையும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியது என்றே கூறலாம். அப்படி சோகம் தாங்க முடியாமல் கதறி அழுத ஒரு பெண் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

சீனாவில் இப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த 21 வயதான ஒரு இளம் பெண் படத்தின் அயர்ன் மேன் இறப்பை தாங்க முடியாமல் திரையரங்கிலேயே கதறி அழுதுள்ளார். அதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மோசமான நிலையை அடைந்துள்ளார். இதனை கண்டஅவரது தோழி உடனே அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு நடந்த சிகிச்சைக்கு பின்னர் அவர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். அயர்ன் மேனின் இறப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், இதனால் அழுது, மருத்துவமனையில் சேரும் அளவுக்கு ஒரு பெண் சென்றிருப்பது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

marvels avengers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe