Advertisment

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பைடனுக்கு வாழ்த்து சொன்ன சீனா...

china wishes joe biden

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

Advertisment

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் முறையாகஅதிபர் மற்றும் துணை அதிபராக வரும் ஜனவரி மாதம் பொறுப்பேற்க உள்ளனர். இந்நிலையில், சர்வதேச நாடுகள் பலவும் பைடனின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து வந்தன. ஆனால், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பைடனின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதைத் தட்டிக்கழித்து வந்தன. அதிபர் தேர்தல் முடிவுகளில், திருப்தியில்லாத ட்ரம்ப், இந்த முடிவுகளை எதிர்த்து வழக்குத் தொடுக்க உள்ளதாகக் குழப்பம் செய்து வந்த சூழலில், அதிகாரப்பூர்வ முடிவுக்குப் பின்னரே வாழ்த்துத் தெரிவிப்போம் எனச் சீனா தெரிவித்தது. இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் பைடனுக்கு சீனா வாழ்த்துக் கூறியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வெளியிட்டுள்ள செய்தியில், "அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம், ஜோ பைடன் மற்றும் ஹாரிஸுக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

china Joe Biden kamala harris
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe