தங்கள் நாட்டு பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்ததை திரும்பபெறவேண்டும் என சீன அரசு எச்சரித்துள்ளது.

Advertisment

china and america

சீன பொருட்களுக்கு இறக்குமதிவரியை அதிகரிப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன அமைச்சகம்எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

சீன பொருட்களின் மீதான மொத்த வரியைநான்கு இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு சீனா எச்சரிக்கை தெரிவித்திருந்தது. இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், இதுகுறித்து நாங்கள் நிறுத்துமாறுகூறினோம், இது இருநாடுகளின் உறவுகளையும் சேதப்படுத்தும் என்றும் நாங்கள் வர்த்தகப் போரை பார்த்து பயப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

அமெரிக்காஇந்த வரி உயர்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று எச்சரித்துள்ள சீன அமைச்சகம், அவர்கள் திரும்பப்பெறவில்லையெனில் நாங்கள் அமெரிக்க பொருட்களுக்கு மூன்று பில்லியன் டாலர்கள்வரை இறக்குமதிவரி விதிக்கப்போவதாகும் எச்சரித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து பலதரப்பினரும் தங்கள் கருத்துக்களை சமூக ஊடங்களில் தெரிவித்துள்ளனர்.