சீனாவில் உகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்தியாவில் கேரளாவில் சிலருக்கு அந்த பாதிப்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20438 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உகான் நகரம் முழுவதும் மூடப்பட்டு சீன அரசு சீல் வைத்துள்ளது. பல நாடுகள் சீனாவுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

Advertisment