ADVERTISEMENT

அமெரிக்க அதிபரின் அதிரடி உத்தரவு; பின்னணியில் தப்பி வந்த சீன அமைச்சர்!

07:58 PM Jun 19, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனாவின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. முதலில் கரோனா வுகான் ஆய்வகத்தில் இருந்து வெளியேறிருக்க வாய்ப்பில்லை என கூறி வந்தாலும், தற்போது கரோனா சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்துதான் பரவியிருக்க வேண்டும் என்ற கருத்து பலப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கரோனா தோற்றம் குறித்து 90 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்தநாட்டு உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் இந்த உத்தரவின் பின்னணி குறித்து தற்போது தகவல்கள் வெளியாகிவுள்ளது. சீன உளவுத்துறையின் துணை அமைச்சராக இருந்த ஜிங்வெய், தனது மகளுடன் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவிலிருந்து தப்பி ஹாங்காங் மூலம் அமெரிக்காவிற்கு சென்றதாகவும், அவர் வுகான் ஆய்வகம் குறித்த அனைத்து ரகசியங்களையும் அமெரிக்காவிடம் அளித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜிங்வெய் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே, 90 நாட்களில் கரோனா தோற்றம் குறித்து அறிக்கை அளிக்க ஜோ பைடன் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மார்ச் மாதம் நடைபெற்ற சீன-அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர்கள் சந்திப்பில், ஜிங்வெய்யை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியதாகவும், அதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT