
சீனாவில் 1988-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை பிரபல சீரியல் கில்லராக இருந்த காவோ சென்னிங்கோங் என்பவருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு இடங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்தி பாலியல் தொல்லைகள் கொடுத்து கொடூரமான முறையில் கொலை செய்த காவோ நீண்ட வருடங்களாக போலீஸாரால் தேடப்பட்டு வந்தான். 11 சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தி கொன்ற வழக்கு, பல திருட்டு வழக்குகள் என பல வழக்குகள் இவன் மீது இருந்துள்ளன. இவனது உறவினர்களின் டி.என்.ஏ வை கொண்டு கண்டறியப்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு இவன் கைதுசெய்யப்பட்டான். கைதை தொடர்ந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் சிறையில் காவோவின் நடத்தை சரியில்லாத காரணத்தால் அவனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது காவோவின் மரண தண்டனையை சீனா வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளதாக அதிகாரபூர்வ செய்தி வெளியிட்டுள்ளது.