china school incident

சீனாவின் தொடக்கப்பள்ளி ஒன்றில் பள்ளியின் காவலாளி நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் குழந்தைகள், ஆசிரியர்கள் உட்பட 39 பேர் காயடைந்துள்ளனர்.

Advertisment

கரோனா வைரஸ் தாக்கம் குறைய தொடங்கியுள்ள சீனாவில், பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் பள்ளி ஒன்றில் காவலாளி நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் குழந்தைகள், ஆசிரியர்கள் உட்பட 39 பேர் காயடைந்துள்ளனர். தென் சீனாவில் வாங்ஃபு பகுதியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில், வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் அப்பள்ளியின் பாதுகாப்பு காவலரான லி ஜியோமின் என்பவர் திடீரென கத்தியுடன் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். உள்ளே நுழைந்த அவர், கண்ணில்பட்ட குழந்தைகள், ஆசிரியர்கள் என அனைவர் மீதும் கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

Advertisment

இந்த தாக்குதலில் குழந்தைகள், ஆசிரியர்கள் உட்பட 39 பேர் காயமடைந்துள்ளனர். இதில் இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர் காவலாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மனஅழுத்தம் காரணமாக காவலாளி இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.