உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸைசீனாஉருவாக்கியதாகவும், சீனஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத்தொடங்கியதாகவும், கரோனாவைரஸ்குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து கரோனாவின் தோற்றம் குறித்து ஆராய, உலக சுகாதாரநிறுவனம் நிபுணர் குழு ஒன்றைஅமைத்தது. முதலில் இந்த நிபுணர் குழுவிற்கு தங்கள் நாட்டிற்குள் வர அனுமதியளிக்காத சீனா, உலக சுகாதார ஆணையத்தின் அறிவுறுத்தலுக்குப் பின் அனுமதியளித்தது.
இந்த நிபுணர்குழுவுகான்வைராலஜி ஆய்வு நிறுவனம், கரோனாமுதலில் அதிகம் பரவத் தொடங்கிய கடல் உணவுச் சந்தை ஆகிய இடங்களை ஆய்வு செய்தது. பிறகு சீனாவில்2019 டிசம்பருக்கு முன் கரோனாதொற்று இல்லை என்றும், கரோனாஆய்வகத்திலிருந்து பரவியிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியது. மேலும் கரோனாதொற்று வௌவாலிடமிருந்து, விலங்கிற்குப் பரவி அதன்மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்காலம் எனக் கூறியது.
இந்த நிலையில் அமெரிக்கபத்திரிக்கைஒன்றிற்குப் பேட்டியளித்த, சீனாவில்ஆய்வு செய்தநிபுணர் குழு உறுப்பினர் ஒருவர், கரோனாபரவல்முதன்முதலில் சீனாவில் எப்போது பரவியது என்பதைக் கண்டறிவதற்காக, முதன்முதலாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் (எந்த மாற்றமும் செய்யப்படாத)தகவல்களைநிபுணர் குழு கேட்டதாகவும், அதனைத்தருவதற்கு சீனா மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாகசீனஅதிகாரிகளுக்கும், நிபுணர் குழுவுக்கும் சூடானவிவாதம் நடந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால், 2019 டிசம்பர் 19க்கு முன் சீனாவில்கரோனாஇல்லை என்ற உலக சுகாதாரநிறுவன நிபுணர் குழுவின் கூற்று சரியானதா?நிபுணர் குழுஅங்கு சுதந்திரமாக ஆய்வு நடத்தியதா என்று தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.