உலகைஅச்சுறுத்தி வரும் கரோனாதொற்றுக்குசீனா, கடந்த வருடம் டிசம்பர் மாதஇறுதியில்,'சினோவாக்' என்ற தடுப்பூசியைப் பயன்பாட்டிற்குகொண்டுவந்தது.
இந்நிலையில், தங்கள் நாட்டு தடுப்பூசிக்கு அனுமதியளிக்குமாறு சீனா, நேபாளைநிர்ப்பந்தித்து வருவது அம்பலமாகியுள்ளது. நேபாளத்தில் இருக்கும்சீனத் தூதரகத்திற்கும், நேபாளநாட்டு வெளியுறவுத்துறைக்கும் கடிதம் மூலம் நிகழ்ந்ததகவல் பரிமாற்றங்கள் கசிந்ததன் மூலம், சீனாவின்நிர்ப்பந்தம்வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்குத் தேவையான ஆவணங்களை பிறகு வழங்குவதாகவும், தடுப்பூசிக்கு முதலில் அனுமதி வழங்குமாறும் சீனா, நேபாளத்திடம் கூறியுள்ளது. மேலும், தங்கள் நாட்டு தடுப்பூசிக்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லையென்றால், நேபாளத்திற்கு கரோனா தடுப்பூசிகள் கிடைக்கநீண்ட நாட்கள் ஆகும் என்றும் சீனாஎச்சரித்துள்ளது.
இதுகுறித்து செய்திகளை வெளியிட்டுள்ளநேபாளஊடகங்கள், சீனவெளியுறவுத்துறை அமைச்சர், நேபாளவெளியுறவுத்துறை அமைச்சரிடம் டெலிஃபோன்வாயிலாகப் பேசி, கரோனாதடுப்பூசிக்கு அனுமதி வழங்க நிர்ப்பந்தித்ததாகவும் தெரிவித்துள்ளன. கரோனாதடுப்பூசியை ஏற்றுக்கொள்ளுமாறு சீனாநேபாளைவற்புறுத்தியுள்ளது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. நேபாள்இன்னும் சீனத்தடுப்பூசிக்கு அனுமதி வழங்கவில்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது.