Skip to main content

சீனாவில் உயரும் பலி எண்ணிக்கை - ரகசிய இடத்தில் சீன அதிபர்..?

Published on 10/02/2020 | Edited on 11/02/2020


சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1016 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் சீனா அதிபர் கடந்த சில வாரங்களாக எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் அந்நாட்டு மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி அவர் ரகசிய இடத்தில் இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்று கூறப்படுகின்றது. 800க்கும் மேற்பட்ட மக்கள் சீனாவில் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் இதுதொடர்பாக ஒரு அறிக்கை கூட அவர் ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இவர் கடைசியாக மூன்று வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா - சீனா விவகாரம்; அவர்கள் பொறுப்பானவர்கள்... தீர்வு காண்பர்கள்- ரஷ்ய அதிபர் புதின் கருத்து!

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

putin

 

ரஷ்ய அதிபர் புதின், உலகம் முழுவதுமுள்ள தேர்தெடுக்கப்பட்ட முன்னணி செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களோடு இன்று உரையாற்றினார். அப்போது இந்தியா - சீனா எல்லை பிரச்சனை, அமெரிக்காவுடனான உறவு ஆகியவை குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். 

 

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக பதிலளித்த புதின், இந்திய-சீன பிரச்சனைகளுக்கு இருநாட்டு தலைவர்களுமே தீர்வு காணுவார்கள் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், இந்திய-சீன உறவுகள் தொடர்பாக சில சிக்கல்கள் இருப்பதை நான் அறிவேன். அண்டை நாடுகளுக்கு இடையே எப்போதும் நிறைய பிரச்சினைகள் இருக்கும். ஆனால் இந்தியப் பிரதமர் மற்றும் சீனா அதிபர் ஆகிய இருவரின் அணுகுமுறையையும் நான் அறிவேன். அவர்கள் மிகவும் பொறுப்பான நபர்கள். அவர்கள் ஒருவரையொருவர் மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் அவர்களே எப்போதும் தீர்வு காண்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் வேறு எந்த பிராந்திய சக்தியும் அதில் தலையிடமால் இருப்பது முக்கியம்" என தெரிவித்தார்.

 

ரஷ்யாவும், சீனாவும் நெருங்கி வருவது, இந்திய - ரஷ்ய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான ஒத்துழைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த புதின், "எங்கள் இந்திய நண்பர்களுடனான உயர்ந்த ஒத்துழைப்பை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். இந்த உறவுகள் ஒரு திட்டம் சார்ந்த இயல்புடையவை. பொருளாதாரம், ஆற்றல் மற்றும் உயர்தொழிநுட்பம் ஆகியவற்றில் முழு அளவிலான ஒத்துழைப்பையும் எங்கள் உறவுகள் உள்ளடங்குகின்றன. பாதுகாப்பு துறையில் நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவுடன் எங்களுக்கு மிகவும் ஆழமான உறவுகள் உள்ளன. நான் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவது குறித்து மட்டும் பேசவில்லை என தெரிவித்தார்.

 

மேலும் மேம்பட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்வதிலும், தொழில்நுட்பங்களை விரிவாக்குவதிலும் இணைந்து செயல்படுவதில் இந்தியாதான் ரஷ்யாவின் ஒரே நண்பன் என தெரிவித்துள்ள புதின், எங்கள் ஒத்துழைப்பு அதோடு மட்டும் நின்றுவிடாது என்றும் எங்கள் ஒத்துழைப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது எனவும் கூறினார். 

 

 

Next Story

கவிதை எழுதி பிரதமர் நரேந்திர மோடி அசத்தல்!

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடைபெற்றது. அப்போது இரு நாட்டு தலைவர்களும் மாமல்லப்புரத்தில் கலைச்சிற்பங்களை பார்த்து ரசித்தனர். மேலும் சீன அதிபருக்கு கலைச்சிற்பங்கள் பற்றிய வரலாற்றை விளக்கினார். அதை தொடர்ந்து கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து, பேசியதுடன் இரு நாட்டு அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. 

PM NARENDRA MODI WROTE A POEM TRANSLATION FOR TAMIL AT TWEETER


இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மாமல்லபுரம் பயணம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார். அதில் மாமல்லபுரத்தின் அழகிய கரையில் இருந்த போது நான் எழுதிய கவிதை, தமிழில் மொழி பெயர்ப்பு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கவிதையில் " அலைகடலே அடியேனின் வணக்கம்" என்ற வரியுடன் தொடங்குகிறது. 

 

PM NARENDRA MODI WROTE A POEM TRANSLATION FOR TAMIL AT TWEETER


சீன அதிபருடனான சந்திப்பின் போது பிரதமர், தமிழக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், வேஷ்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தார் என்பதும், தமிழக வருகை குறித்து ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.