china

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸைசீனாஉருவாக்கியதாகவும், சீனஆய்வகத்திலிருந்து இந்தவைரஸ்பரவத்தொடங்கியதாகவும், கரோனாவைரஸ்குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

Advertisment

எனவே கரோனாவைரஸின்தோற்றம் குறித்துஆய்வு செய்ய, உலக சுகாதாரநிறுவனம், அறிவியல் நிபுணர்கள் குழுவை அமைத்தது. இதனையடுத்துஅந்த அறிவியல் நிபுணர் குழுஉறுப்பினர்கள் சீனாவிற்குப் பயணத்தைதொடங்கிய நிலையில், தங்கள் நாட்டிற்குள் அந்த அறிவியல் நிபுணர்குழுவருவதற்குசீனாஅனுமதி தரவில்லை. இதற்கு அதிருப்தி தெரிவித்தஉலக சுகாதாரநிறுவனம்,இந்தப் பணி ஐ.நா. சுகாதார நிறுவனத்திற்கு முன்னுரிமை என்பதைத் சீனாவிற்குத் தெளிவுபடுத்தியதாகவும், நிபுணர் குழுவுக்கு சீனாவில் ஆய்வு செய்யும் அனுமதியைவழங்குவதற்கான உள்நடைமுறைகளை வேகப்படுத்துவதாக அந்த நாடுஉறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில், கரோனாதொற்று உருவான விதம் குறித்துஆய்வு நடத்தும்விதமாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக சீன சுகாதாரத்துறை ஆணையம், நிபுணர்குழு வரும் 14 ஆம் தேதி சீனாவிற்கு வருவார்கள் என அறிவித்துள்ளது.