Advertisment

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் புதிய சட்டத்தை நிறைவேற்றும் சீனா..

China parliament approves Hong Kong security bill

Advertisment

ஹாங்காங் நகர மக்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஹாங்காங்கிற்கான 'தேசியபாதுகாப்புச் சட்டத்தை' முன்னெடுத்துச் செல்வதற்கான முடிவுக்குச் சீன நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங் சுதந்திர பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு அது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஹாங்காங் பகுதியை நிர்வகிக்க நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஆட்சி நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நிர்வாகப் பகுதியான ஹாங்காங்கைத் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுவரும் சீனா அதற்கான பணிகளையும் ஹாங்காங் மக்களின் எதிர்ப்பை மீறிச் செய்து வருகிறது. குற்றவாளிகளைச் சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்க்மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்த சூழலில், தற்போது அந்நகரத்தில் புதிய போராட்டங்களைத் தூண்டியுள்ளது சீனாவின் இந்தப் புதிய தேசியபாதுகாப்புச் சட்டம் குறித்த முடிவு.

ஹாங்காங் நகரத்தின் சிறப்புச் சுயாட்சி மற்றும் சுதந்திரங்களை இந்தச் சட்டம் பாதிக்கக்கூடும் என உலக நாடுகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் நகரத்தில் பிரிவினை, பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டுத் தலையீட்டைக் கையாளவே இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாகச் சீன கூறும் நிலையில், இது ஹாங்காங் நகரத்தை முழுமையாகச் சீனாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடும் என்கின்றன மேற்கத்திய நாடுகள். இந்நிலையில் ஹாங்காங் நகர மக்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஹாங்காங்கிற்கான தேசியபாதுகாப்புச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முடிவுக்குச் சீன நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.ஹாங்காங் மக்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்கும் அதே நேரம், அந்நகரத்தின் நிர்வாக தலைவரான கேரி லேம் இந்தச் சட்ட ஒப்புதலுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

hongkong china
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe