ADVERTISEMENT

ஜி-7 நாடுகளில் இந்தியாவை இணைக்கும் ட்ரம்ப்பின் திட்டம்... சீனா எதிர்ப்பு...

12:56 PM Jun 03, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT


ஜி-7 நாடுகளில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை இணைக்கவேண்டும் என ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT


வளர்ந்த பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் ஏழு நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 கூட்டமைப்பு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டங்களில் பொருளாதார முன்னேற்றம், வணிகம் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாடு ஜூன் மாத இறுதியில் நடைபெறுவதாக இருந்த சூழலில், அதனை, செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

மேலும், இந்த அமைப்பு குறித்து பேசிய ட்ரம்ப், ஜி7 கூட்டமைப்பு ஒரு காலாவதியான நிலையில் இருப்பதாகவும், இதனைச் சரிசெய்ய ஜி10 அல்லது ஜி11 என்று விரிவுப்படுத்தி, இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளை இந்த அமைப்பில் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பேசியுள்ள சீனாவில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், "சர்வதேச அமைப்புகளும், மாநாடுகளும், பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவே இருக்க வேண்டும். பெரும்பாலான நாடுகள் அத்தகைய நிலையில் செயல்படுவதாகவே சீனா நம்புகிறது. சீனாவை எதிர்க்கும் விதமாக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் தோல்வியில்தான் முடிவடையும்" எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT