Advertisment

உணவகம் இடிந்து விழுந்த கோர விபத்தில் 29 பேர் பலி...

china hotel accident

Advertisment

சீனாவில் இரண்டு அடுக்கு உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில் 29 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் ஷாங்ஷி மாகாணம் ஜியான்பெங் நகரின் அருகே சென்ஹுவாங் என்ற கிராமத்தில் இரண்டு அடுக்கு கொண்ட பழமையான உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அந்த கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அந்த உணவகத்தில், அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சுமார் 60 -க்கும் மேற்பட்டோர் கூடியிருந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாகக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

இந்த கோர விபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வந்தவர்கள் இடிபாடுகளில் .சிக்கினர். தகவலறிந்து அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த விபத்தில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தெரியாத நிலையில், இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

china
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe