கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் சீனாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 2000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார். மேலும், சுமார் 74,185 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 11,977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து தற்போது குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 14,376 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.