ADVERTISEMENT

அருணாச்சலத்தில் சுரங்கம் மூலம் இந்தியாவை நெருங்குகிறதா? சீனா

11:54 AM May 21, 2018 | vasanthbalakrishnan

அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதிகளில் ஒருசில பகுதிகளை ஏற்கனவே சீனா உரிமை கொண்டாடிவருகின்ற நிலையில் தற்போது அருணாச்சலப்பிரதேசத்தை ஒட்டிய பகுதியில் சீனா மிகப்பெரிய அளவிலான தங்கசுரங்கம் அமைப்பது இந்தியாவிற்கு சிக்கலை உருவாக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அருணாச்சலபிரதேசம் -சீன எல்லைப்பகுதியான இகுன்ஸே பகுதியில் சீன அரசு தங்க சுரங்கம் ஒன்றை நிறுவப்போவதாக ஹாங்-காங்கிலிருந்து வெளிவரும் சவுத் சீனா மார்னிங் போஸ்டில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சுரங்கத்தில் 5700 கோடி டாலர் மதிப்பிலான தங்கம், வெள்ளி போன்ற தாதுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அமையவுள்ள சுரங்க பணி காரணமாக இமயமலையை ஒட்டிய அந்த நிலப்பரப்பு பகுதியில் சீன மக்கள்தொகை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ராணுவ நடவடிக்கையும் கையிலெடுக்கப்படலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆதிக்கம் தொடர்ந்தால் தென் சீன கடல் பகுதியை சீனா ஆக்கிரமித்ததை போன்ற நிலை மீண்டும் அருணாச்சலப்பிரதேச எல்லைப்பகுதியிலும் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT