Skip to main content

இறந்த ஓனருக்காக 80 நாட்கள் காத்திருந்த நாய்! சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்(வீடியோ) 

Published on 14/11/2018 | Edited on 14/11/2018
dog


சீனாவில் இறந்துபோன உரிமையாளர் உயிருடன் திரும்பி வருவார் என்று எண்ணி நாய் ஒன்று கண்ணீர் மல்க 80 நாட்களாக காத்திருக்கிறது. தற்போது சமூக வலைதளத்தில் அந்த நாய் அந்த பகுதியில் காத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அன்று இந்த நாயின் உரிமையாளரான  ஹோட், சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவரது உடலுக்கு அருகில் பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தது இந்த நாய். அன்றிலிருந்து தற்போதுவரை நாள்தோறும் அந்த பகுதிக்கு வரும் நாய், தனது உரிமையாளர் உயிரோடு வருவார் என்ற நம்பிக்கையுடன் கடந்த 80 நாட்களாக காத்துக்கொண்டிருக்கிறது. இதனைக் கண்டு நெகிழ்ந்து போகும் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள், நாய்க்கு உணவளித்து செல்கின்றனர்.
 

இதை போலவே 1920களில் தனது உரிமையாளர் மறைந்த ரயில் நிலையத்தில் ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக ரயில் நிலையத்திற்கு சென்றது ஹச்சிகோ என்ற நாய். இந்த ஜப்பானில் அதிக பிரபலமுடையது. ஹச்சிகோவிற்கு ஜப்பானில் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கார்கே இது போன்ற விஷயங்களில் பொறுப்புடன் பேச வேண்டும்” - மத்திய அமைச்சர் விமர்சனம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Union Minister pralhad joshi says Kharge should speak responsibly on such matters

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார் என்ற இடத்தில் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தியின் குடும்பத்தை வசைபாடுவதிலே முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மோடி தன்னை ‘56’ அளவு மார்பு கொண்டவன், பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை கொடுத்தது ஏன்?. சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அல்லது அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (05-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பற்றி நான் இத்தகைய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரபலமான பிரதமராக இருப்பதால், கார்கே எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கார்கே, மாபெரும் கட்சியின் தேசியத் தலைவர். 

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை. சீனாவின் ஊடுருவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். 1962ஆம் ஆண்டில், 34,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியபோது அதை ஏன் காங்கிரஸ் தடுக்கவில்லை?. சீனாவை இந்திய எல்லைக்குள் நுழைய எங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறோம். ஒரு அங்குல நிலம் கூட யாராலும் அபகரிக்கப்படவில்லை” என்று கூறினார்.

Next Story

தெரு நாய்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்த நகராட்சி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
municipality caught stray dogs and handed them over to the shelter

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தெரு நாய்களால் அடிக்கடி விபத்துகள், நாய்கள் கடித்தல், ஆடு, மாடு கால்நடைகளை கடித்து குதறிவிடுகிறது. அதனால் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலரும் மனுக்கள் கொடுத்திருந்தனர்.

இந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து நகராட்சி ஊழியர்கள் 42 நாய்களை பிடித்திருந்தனர். இந்த நாய்களை வெளியிடங்களிலோ, காட்டுப் பகுதியிலோ இறக்கிவிடப்படும் போது மீண்டும் வந்துவிடும் என்பதால்  விராலிமலை ரோடு இலுப்பூர் தாலுகாவில் உள்ள பைரவர் நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க கேட்டுள்ளனர்.

இதே போல கிராமங்களிலும் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்களையும் பிடித்து காப்பகங்களில் வளர்க்கப்படுமானால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் நாய்கள் கொல்லப்படாமலும் பாதுகாக்கப்படலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.