மனிதர்கள் மூலம் பரவும் கரோனா ஆட்கொல்லி வைரஸானது உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002- ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான் இந்த கரோனா என கூறப்படுகிறது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள இந்த கரோனா வைரஸ் பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

china coronavirus beijing incident peoples government hospital

Advertisment

Advertisment

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பால் சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வூஹான் நகரில் கரோனாவைரஸ் பாதிப்பால் இதுவரை 80 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்த சமபவம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2,744 ஆக அதிகரித்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.