china

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸைசீனாஉருவாக்கியதாகவும், சீனஆய்வகத்திலிருந்து இந்தவைரஸ்பரவத்தொடங்கியதாகவும், கரோனாவைரஸ்குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

Advertisment

எனவே கரோனாவைரஸின்தோற்றம் குறித்துஆய்வு செய்ய, உலக சுகாதாரநிறுவனம் அறிவியல் நிபுணர்கள் குழுவை அமைத்தது. இதனையடுத்துஅந்த அறிவியல் நிபுணர்குழுஉறுப்பினர்கள் சீனாவிற்குப் பயணத்தைதொடங்கிய நிலையில், தங்கள் நாட்டிற்குள் அந்த அறிவியல் நிபுணர்குழுவருவதற்குசீனாஅனுமதி தரவில்லைஎனஉலக சுகாதாரநிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்துஉலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், “சீனாவிற்கு நிபுணர்குழு செல்வதற்குத் தேவையான அனுமதிகளைசீன அதிகாரிகள் இன்னும் இறுதி செய்யவில்லை என்பதை இன்று நாங்கள் அறிந்தோம். இந்த செய்தி குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்.இரண்டு உறுப்பினர்கள் ஏற்கனவே தங்கள் பயணங்களைத் தொடங்கியுள்ளனர்.மற்றவர்கள் கடைசி நிமிடத்தில் பயணிக்க முடியவில்லை” எனதெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இந்த பணி ஐ.நா. சுகாதார நிறுவனத்திற்கு முன்னுரிமை என்பதைத் தெளிவுபடுத்தினேன். நிபுணர்குழுவுக்கு சீனாவில் ஆய்வு செய்யும் அனுமதியைவழங்குவதற்கான உள்நடைமுறைகளை வேகப்படுத்துவதாக அந்த நாடுஉறுதியளித்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment