இஸ்ரேலுக்கான சீனதூதர், தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பரபரப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான சீன தூதராக அறிவிக்கப்பட்ட டு வெய் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் வைத்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், மரணத்துக்கான காரணம் எதையும் இஸ்ரேல் குறிப்பிடாத நிலையில், அவர் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளால் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 58 வயதான அவர் இதற்கு முன்பு உக்ரைன் நாட்டுக்கான சீனதூதராகவும் இருந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.