Skip to main content

”மொபைலோடு விளையாடாதீங்க, எங்களோடு விளையாடுங்க”-முழக்கமிட்ட சிறுவர்கள் பேரணி

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
germany protest


இக்கால கட்டத்தில் அருகில் இருந்தால் கூட, ஒருவர் ஒருவருடன் பேசிக்கொள்ளாமல் மொபைலையே பார்த்துகொண்டிருக்கிறொம். குழந்தைகள், பெரியவர் என்று அனைத்துவிதமான வயதுடையவர்களும் மொபைலே கதி என்று இருக்கிறார்கள். இவ்வளவு ஏன் பெற்றோர்கள் கூட தன் குழந்தைகளுக்கு அறிவுரை தராமல் அவர்களும் மொபைலும் கையுமாக இருக்கிறார்கள். 
 

ஜெர்மனியைச் சேர்ந்த எமில் என்ற சிறுவனின் பெற்றோர்கள் அவனிடம் பேச நேரம் ஒதுக்காமல் மொபைலும் கையுமாக இருப்பதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று 150 சிறுவர், சிறுமியர்களை அழைத்துகொண்டு பேரணி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த பேரணியின் முழக்கம் என்ன என்றால்,”செல்போனில் விளையாடாதீர்கள். அதற்குப் பதிலாக என்னுடன் விளையாடுங்கள்” என்பதுதான். செப்டம்பர் 8ஆம் தேதி  நடந்த இந்த பேரணி, பலரை கவர்ந்துள்ளது. எமிலுக்கான ஆதரவு குரல்கள் பல தரப்புகளில் இருந்து கிடைத்துள்ளது. சுமார் 150 சிறுவர்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேரணியை நடத்திய எமில் ரஸ்டிக்கின் வயது எழு என்பது குறிப்பிடத்தக்கது.   

சார்ந்த செய்திகள்

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

சந்திரமுகி போல சூகுனா கதாபாத்திரமாக மாறிய இளைஞர்; ராணிப்பேட்டையில் பரபரப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 A youth who became a Sukuna character like Chandramukhi; Bustle in Ranipet

 

செல்போன் கேம்களில் மூழ்கி, அதனால் மனம் சிதைந்த கல்லூரி மாணவன் ஒருவன் வெறி பிடித்ததை போல் நடந்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ளது காலிவாரி கண்டிகை. இப்பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த கல்லூரி மாணவர் தனி அறையில் புகுந்துகொண்டு செல்போனில் கேம் விளையாடுவதையும் அனிமேஷன் தொடர்களை பார்ப்பதையும்  வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

 

நேற்று வரை நன்றாக இருந்த மாணவர் திடீரென செல்போன் கேமை அதிகமாக விளையாடியதால் வெறிபிடித்த நபர் போல் மாறியுள்ளார். வீட்டில் உள்ளவர்களையும் அவதூறாக பேசும் அளவிற்கு சென்றுள்ளார். 'ஏன் இப்படி பேசுகிறாய்' என கேட்க வருபவர்களை தாக்கவும் முயன்றுள்ளார். இதனால் மிரண்டுபோன இளைஞரின் தாய் அவரது கைகளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கட்டி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனையில் இருப்பவர்களையும் மிரட்டும் தொனியில் பேசியதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி அவர் கை, கால்கள் கட்டப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இது தொடர்பான விசாரணையில் அந்த மாணவர் ஜப்பான் அனிமேஷன் தொடர்களில் வரும் சூகுனா என்ற கதாபாத்திரம் மீது கொண்ட ஈர்ப்பால் அந்த கதாபாத்திரம் போலவே மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.