childhood nemesis; Attempted poisoning a chess board; Police in shock

குழந்தை பருவத்தில் இருந்தே செஸ் போட்டியில் தனக்கு எதிர்த்தரப்பு போட்டியாளராக இருந்த பெண் ஒருவரை செஸ் போர்டில் விஷம் தடவி பெண் ஒருவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

அமினா அபகரவா (40). ரஷ்யாவைச் சேர்ந்த செஸ் வீராங்கனையான இவர் ரஷ்யாவின் தகெஸ்தான் பகுதியில் உள்ள மகாசக்லா என்ற நகரில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். அதே போட்டியில் அமினா அபகரோபாவின் குழந்தைப் பருவ எதிரியான உமைகனாட் ஒஸ்மானோ என்பவரும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில்செஸ் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென உமைகனாட் ஒஸ்மானோ தலை சுற்றி கீழே விழுந்தார்.

Advertisment

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென செஸ் போட்டியாளர் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செஸ் விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த ஆடிட்டோரியத்தின் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு பார்வையிட்ட போது அதில் அமினா அபகரோவா, உமைகனாட் ஒஸ்மானோவின் டேபிளில் உள்ள செஸ் போர்டின் மீது எதையோ ஒன்றை தடவும் காட்சி இடம் பெற்றிருந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது, குழந்தை பருவம் முதலே உமைகனாட் ஒஸ்மானோ தனக்கு செஸ் போட்டியில் எதிரியாக இருந்ததாகவும், பல நேரங்களில் அவரிடம் தோற்றுள்ளதால் ஏற்பட்ட அவமானத்திற்காக பழிவாங்க அவருடைய செஸ் போர்டில் பாதரசத்தை தடவிதாகவாக்குமூலம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.