Advertisment

ஜன்னலில் இருந்து பால்கனிக்கு ஓடிய குழந்தை... நான்காவது மாடியில் நடந்த விபரீதம்! (வீடியோ)

ஸ்பெயின் நாட்டில் குழந்தை ஒன்று ஆபத்தான முறையில் மாடியில் விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் பாராடைஸ் பீச் என்ற அடுக்குமாடி குடியிருப்பு புகழ்பெற்ற கட்டிடங்களில் ஒன்று. அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அங்கு நடைபெற்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அந்த குடியிருப்பு வாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

gh

அந்த குடியிருப்பில் நான்காவது மாடியில் குழந்தை ஒன்று ஜன்னலின் வழியாக பால்கனிக்கு ஆபத்தான முறையில் நடந்து சென்றுள்ளது. சற்று கால் இடறினாலும் மிகப்பெரிய ஆபத்து நேர்ந்துவிடும் நிலையில், குழந்தை ஆபத்தான முறையில் அந்த பாதையில் நடந்து செல்வதை எதிர் பிளாட்டில் குடியிருக்கும் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

VIRAL
இதையும் படியுங்கள்
Subscribe