Advertisment

'போய் வருகிறேன் அமெரிக்கா'-பயணத்தை முடித்த முதல்வர் 

The Chief Minister who completed- 'bye bye America'

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் தற்பொழுது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா கிளம்பியுள்ளார்.

Advertisment

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதிஅமெரிக்கா சென்ற நிலையில் தினந்தோறும் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அதற்கான அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. அதேபோல் அமெரிக்காசென்ற தமிழக முதல்வர் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள், தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.

Advertisment

முதல்வரின் இந்த அமெரிக்க பயணத்தில் மொத்தமாக தமிழகத்திற்கு 7,616 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர் தற்பொழுது தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரை அங்கிருந்த தொண்டர்கள் வழி அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அவருடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் 'Goodbye, USA!' (போய் வருகிறேன் அமெரிக்கா) என பதிவிட்டுள்ளார்.

America TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe