Advertisment

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு!

mhc-cj-mm-vatsava

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த கே.ஆர். ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதே சமயம் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு இன்று (21.07.2025) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முருகாணந்தம்,  சபாநாயகர் அப்பாவு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், கே.என். நேரு, எ.வ. வேலு, முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம், ஜெயக்குமார், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா கடந்த 1964 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் பிறந்தவர் ஆவார். இவர் பிலாஸ்பூரில் பள்ளிப் படிப்பையும், சி.எம்.டி. கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், கே.ஆர். சட்டக் கல்லூரியில் தங்கப் பதக்கத்துடன் எல்.எல்.பி. பட்டத்தையும் பெற்றார். மேலும் பிலாஸ்பூரில் உள்ள குரு காசிதாஸ் பல்கலைக்கழகத்தின் படிப்பு வாரியம் மற்றும் கல்வி கவுன்சிலின் உறுப்பினராக இருந்தார். இதனையடுத்து ஜபல்பூர் பார் கவுன்சிலில் 1987ஆம் ஆண்டு சேர்ந்தார். 

அதனைத் தொடர்ந்து ராய்கர் மாவட்ட நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். அதோடு வருமான வரித் துறை, ராய்ப்பூர் நகராட்சி மன்றம் மற்றும் சத்தீஸ்கர் மாநில மின்சார அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவற்றிற்கான நிலை ஆலோசகராக இருந்தார். ரோட்டரி அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர் ஆவார். இதனையடுத்து 2005ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு 2021ஆம் ஆண்டு பதவியேற்றார். அதன் பின்னர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (06.02.2024) பதவியேற்றார். 

அதனைத் தொடர்ந்து ராய்கர் மாவட்ட நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். அதோடு வருமான வரித் துறை, ராய்ப்பூர் நகராட்சி மன்றம் மற்றும் சத்தீஸ்கர் மாநில மின்சார அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவற்றிற்கான நிலை ஆலோசகராக இருந்தார். ரோட்டரி அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர் ஆவார். இதனையடுத்து 2005ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு 2021ஆம் ஆண்டு பதவியேற்றார். அதன் பின்னர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (06.02.2024) பதவியேற்றார்.  அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Chief Justice high court oath ceremony raj bhavan RN RAVI
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe