உலகம் முழுவதும் கொட்டப்படும் பலவகையான வேதிப்பொருள் மற்றும் மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளவும் அதனை அப்புறப்படுத்தவும் மொத்த உலகமுமே தடுமாறிவருகிறது.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் இந்தக் கழிவுகளினால் சுற்றுச்சூழல் மற்றும் அனைத்து வகையான உயிரனங்களும் ஏதோ ஓர் வகையில் பாதிப்புக்குள்ளாகிறது. இதனைத்தடுக்கவும் உயிரனங்களைக் காக்கவும், சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்களும் ஜெர்மனிய ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகமும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.மேலும், கழிவுகளை முறையாக அழிக்கவும் அதேசமயம் இணை உரமாக மாற்றவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.