Advertisment

இங்கிலாந்து மன்னராக முடி சூடப் போகும் மூன்றாம் சார்லஸ்

Charles III to be crowned King of England

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி உயிரிழந்தார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற நிலையில் அவரது மறைவு உலக நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு மரியாதைக்கு பிறகு அவரது உடல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டனின் இளவரசர் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராகப் பொறுப்பேற்றார். மன்னராகப் பொறுப்பேற்ற சார்லஸின் முடி சூடும் விழா இன்று லண்டனில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது. சார்லஸ்ஸைஅழைத்துச் செல்ல 700 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசன சாரட் வண்டி தயார் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடி சூடிக்கொண்ட பிறகு அவரும் அவரது மனைவி கமிலாவும் பக்கிங்காம் அரண்மனை தேவாலயத்திற்கு சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். மன்னராக முடி சூட்டப்படும் சார்லஸ்க்கு புனித எட்வர்டின் கிரீடம் அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கமிலா இங்கிலாந்து இராணியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

இந்த விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியா சார்பில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.

elizabeth England
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe