Advertisment

ட்விட்டர் பயன்படுத்தக் கட்டணம்; எலான் மஸ்க் திட்டம்

Charges to use Twitter.. Elon Musk

Advertisment

ட்விட்டர் தளம் என்பது உலகில் அனைவரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய சமூக வலைத்தளமாக இருந்து வருகிறது. இதனைப் பயன்படுத்த எவ்வித கட்டணமும் நாம் செலுத்த வேண்டியதில்லை. ஒருவேளை, நமது ட்விட்டர் கணக்கைத்தனித்துவமாக மற்றும் அதிகாரப்பூர்வ கணக்காகக் காட்ட விரும்பினால் ப்ளூ டிக் எனப்படும் வசதியைப் பணம் கட்டிப் பெறலாம். மேலும், நாட்டின் பிரதமர், ஜனாதிபதி போன்றவர்களுக்கு கிரே கலர் டிக்கும் வழங்கப்படுகிறது. இந்த செயலியில், சிலர் தானாகவே ட்வீட் செய்யும் 'பாட்'க்கள் பலவற்றை உருவாக்கி வந்தனர். இதனால் சில தவறான தகவல்கள் அதிகமாக மக்களிடம் சேர்கிறது எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் தான், ட்விட்டர் செயலியின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விவாத நிகழ்வில்கலந்துகொண்டார். அதில், பெஞ்சமின் அவர்கள் மஸ்க்கிடம்,ஆன்லைனில் பாட்கள் மூலம் பகிரப்படும் யூத எதிர்ப்பை ட்விட்டர் எவ்வாறு தடுக்கப் போகிறது எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த மஸ்க், "ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு சிறிய மாதாந்திர கட்டணத்தை நிர்ணயிப்பது தீர்வாக இருக்கலாம். மேலும், பாட்களின் படைகளை எதிர்த்துப் போரிடுவதற்கு ஒரே வழி இதுதான் என நினைக்கிறேன். ஏனென்றால், பாட்களின் விலை தற்போது சில பைசாக்களில் கிடைக்கிறது. ஒருவேளை அது சில டாலர்களாக உயர்ந்தால் பயன்பாடுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து, நீங்கள் ஒவ்வொரு புதிய பாட்களுக்கும் தனித்தனி கட்டணங்களை செலுத்த வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

மஸ்க் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் பிரதானமாக செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்துவதுகுறித்துப் பேசியுள்ளனர்.

Advertisment

அனைத்து ட்விட்டர் பயனர்களும் மாதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சூழல் உருவானால், ஏராளமான போலி கணக்குகள் முடக்கப்படும். அதேவேளையில், ட்விட்டர் நிறைய பயனர்களையும் இழக்க நேரிடும் எனவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை பயனர்களிடம் சிறியளவில் மாதக் கட்டணம் பெற்றால் ட்விட்டரின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ட்விட்டர் பல முக்கிய அம்சங்களை கொண்டு வருகின்ற தருணத்தில் இந்த முடிவு தேவைதானாஎன்ற கேள்விகளும் எழுகின்றன.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe