Advertisment

கரப்பான் பூச்சிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்... வைரலாகும் வீடியோ!

உலகில் தினமும் ஏதாவது ஒரு விசித்திர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், மருத்துவர் ஒருவர் கரப்பான் பூச்சிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த பெஸ்கி என்பவர் தன்னுடைய வீட்டில் கரப்பான் பூச்சி ஒன்றை ஆசையாக வளர்த்துள்ளார். அதனோடு அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்.

Advertisment

fg

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அந்த கரப்பான் பூச்சி உடல் நலக்குறைவு ஏற்பட்டதை போன்று நடந்து கொண்டுள்ளது. அதனோடு மகிழ்ச்சியாக இருந்த அதன் உரிமையாளர் கரப்பான் பூச்சியின் இந்த திடீர் மாற்றத்தால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மருத்துமனைக்கு கரப்பான் பூச்சியை கொண்டு சென்றுள்ளார். அங்கு அதனை பரிசோதித்த மருத்துவர், கரப்பான் பூச்சி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார், மேற்கொண்டு அதற்கு பிரசவமும் பார்த்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIRAL PHOTO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe