தன்னுடைய நாயை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு 42 கோடி செலவு செய்து ஒருவர் பாராட்டு தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் வெதர் டெக் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருப்பவர் டேவிட் மேக்நெய்ல். இவருடைய நாய் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடந்த அவர் கால்நடை மருத்துவமனையில் அதை அட்மிட் செய்தார்.

Advertisment

hgj

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அந்த நாய்க்கு இதயத்தில் கட்டி இருப்பதை கண்டுபடித்தனர். இதற்காக அந்த நாயை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நீண்ட போரட்டத்திற்கு பிறகு அந்த நாய்க்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருக்கின்றது. இதற்காக அந்த மருத்துவர்களை பாராட்டும் விதமாக சுமார் 42 கோடி செலவு செய்து டேவிட் மேக்நெய்ல் அந்த மருத்துவர்களை பாராட்டியுள்ளார்.