Advertisment

"இது நீங்கள் கேட்க விரும்பும் செய்தி அல்ல' - ஒரே ஜூம் காலில் 900 பேரின் வேலையை பறித்த தலைமை செயல் அதிகாரி!

BETTER . COM

Advertisment

பெட்டர்.காம் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஷால் கர்க், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 900 ஊழியர்களை ஒரே ஜூம் காலில் வேலையை விட்டு நீக்கியுள்ளார். ஜூம் காலில் ஊழியர்களை அழைத்தஅவர், "இது நீங்கள் கேட்க விரும்பும் செய்தி அல்ல... நீங்கள் இந்த காலில் இருந்தால், பணிநீக்கம் செய்யப்படும் துரதிர்ஷ்டவசமான குழுவில் நீங்களும் ஒரு பகுதியாக உள்ளீர்கள்" என கூறி அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பணி வாழ்வில், ஊழியர்களை இரண்டாவது முறையாக பணி நீக்கம் செய்யப்போவதாக தெரிவித்த அவர், முதல்முறைஇதனைசெய்தபோதுஅழுததாகவும், இந்த முறை திடமாக இருப்பேன் என நம்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் விஷால் கர்க்,சந்தை செயல்திறன், பணியாளர்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவை காரணமாகவே பணி நீக்கம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

America employees ZOOM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe