Advertisment

சிமெண்ட் விலை அதிகரிக்கும்... உற்பத்தியாளர்கள் தகவல்!

Cement prices to rise ... Manufacturers Info!

சிமெண்ட்விலை மூட்டைக்கு 60 ரூபாய் அதிகரிக்கும் எனசிமெண்ட்உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து தென்னிந்தியசிமெண்ட்உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகசிமெண்ட்விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் வரை விலை அதிகரிக்கும்.

Advertisment

நாடுமுழுவதும்உள்ள அனல்மின்நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கான நிலக்கரி கையிருப்பு என்பது குறைந்து வருகிறது. இதனால் விரைவில் நிலக்கரி தட்டுப்பாடு என்பது உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.சிமெண்ட்உற்பத்தி செய்யும் ஆலைகளில்முக்கிய எரிபொருள் நிலக்கரி என்பதால் அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டியுள்ளது. இதனால் 50 கிலோ எடை கொண்ட ஒருசிமெண்ட்மூட்டையின்உற்பத்தி விலை 60 ரூபாய் அதிகரிக்கும் நிலைஉள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிமெண்ட்உற்பத்தி விலை 60 ரூபாய் அதிகரிக்கும் பட்சத்தில் நுகர்வோருக்கு விற்கப்படும் விலையும் அதிகரிக்கும், உதாரணமாக ஒரு மூட்டைசிமெண்ட்340 ரூபாய் என இருந்தால் 400 ரூபாய்க்குமேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.கரோனாஊரடங்கிற்குப்பிறகு கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்பொழுது மீண்டும்சிமெண்ட்விலையேற்றம்என்பது நுகர்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

building cement Productions
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe