Cell phone that saved life ... Video of a soldier going viral

Advertisment

உக்ரைன் வீரர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் அவர் மீது பாய்ந்த தோட்டாவை தடுத்து நிறுத்தி அவரின் உயிரை காப்பாற்றியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாதக்கணக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரில் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகிபரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் ராணுவத்தினர் மீது ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய வீரர் ஒருவர் சுட்டதில் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டானது பதுங்கியிருந்த உக்ரைன் வீரரின் செல்போன் மீது பாய்ந்தது. இதனை அருகிலிருந்த சக வீரர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த காட்சியில் செல்போன் மீது துப்பாக்கி குண்டு பதிந்திருந்தது. தன் மீது பாய இருந்த குண்டு செல்போன் மீது பட்டு தடுத்து நிறுத்தபட்டதால் தான் உயிர்பிழைத்ததாக சக வீரர் அவரிடம் அந்த செல்போனை எடுத்துக் காட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.