கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் சிகாகோ நகதில் உள்ள பாதாளச் சாக்கடை குழாயில் பூனை குட்டி மாட்டிகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சாக்கடையை மூடியிருந்த குழாயில் வழியாக உள்ளே விழுந்த அந்த பூனை குட்டி வெளியேற முடியாமல் தவித்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அந்த பூனையை மீட்க அவர்கள் எவ்வளவோ முயன்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தது. பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/600 punaki.jpg)
இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ரங்கூன் வகையை சேர்ந்த அந்த பூனையின் தலையை அந்த இரும்பு தகட்டில் இருந்து விடுவிக்க முயன்றனர். ஆனால் தலை பகுதி கடுமையாக அந்த குழாயில் சிக்கி இருந்ததால், பூனையை மீட்பதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அந்த பூனையை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow Us