தியானத்தில் அமர்ந்திருந்த புத்த துறவியிடம் பூனை ஒன்று சேட்டை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாங் கோம்ரிட் என்ற புத்த துறவி தாய்லாந்தை சேர்ந்தவர். மிக இளம் வயதிலேயே புத்த துறவியாக மாறியவர். இந்நிலையில், வாட் உடாம்ரங்கிஸ்கி என்ற இடத்தில் உள்ள புத்த கோயிலில் அவர் தியானத்தில் இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த பூனை ஒன்று அவர் மீது ஏறி சேட்டை செய்துள்ளது. பூனையின் செயலை கண்டுகொள்ளமல் தொடர்ந்து அவர் தியானம் செய்த நிலையில், ஒரு கட்டத்தில் பூனையின் சேட்டை அதிகமாகவே அவர் கண் விழித்தார். இந்த காட்சி அனைத்தும் அங்கிருந்த கேமராவில் பதிவாகியது. இந்த சுவாரசிய காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.