பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு ஒரு பூனை வாரிசாகியுள்ள நிகழ்வு பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

Advertisment

ghgfhgfh

பாரிஸ் நகரை சேர்ந்த ஜெர்மனியை பூர்விகமாக கொண்ட கார்ல் லாகெர்பெல்ட். பிரான்ஸ் நாட்டில் இருந்த தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளராக இருந்த இவர் தனது 85 ஆவது வயதில், கடந்த 19-ந்தேதி காலமானார். இந்நிலையில் அவர் தனக்கு சொந்தமான சொத்தை அவர் பல ஆண்டுகளாக ஆசையாக வளர்த்த பூனையின் பெயரில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். இதன்மூலம் சவ்பெட் என பெயரிடப்பட்ட அந்த பூனை தான் தற்போது உலகிலேயே பணக்கார விலங்காக மாறியுள்ளது.

Advertisment

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கார்ல் லாகெர்பெல்ட் ஒரு பேட்டியில் கூறும்போது, சட்டம் அனுமதித்ததால் எனது சவ்பெட்டை திருமணம் செய்து கொள்வேன் என்றும், கண்களின் வழியாக தாங்கள் இருவரும் உரையாடிக்கொள்வோம் எனவும் வேடிக்கையாக கூறினார்.

அதனை தொடர்ந்து சவ்பெட்டை தனது வாரிசாக அறிவித்த அவர், தனது இறப்புக்கு பின் தன்னுடைய சொத்தின் ஒரு பகுதியை அந்த பூனைக்கு வழங்கும் வகையில் உயில் எழுதியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் இறந்த நிலையில் அவரின் சொத்திலிருந்து 1400 கோடி ரூபாய் அந்த பூனைக்கு வந்துள்ளது.

Advertisment