ADVERTISEMENT

முதலையின் கழுத்தில் சிக்கிய டயரை எடுத்தால் ரொக்கப்பரிசு!

09:45 PM Feb 01, 2020 | suthakar@nakkh…

இந்தோனேஷியாவில் பைக் டயரில் சிக்கியிருக்கும் முதலையிடம் இருந்து டயரை வெளியே எடுத்தால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவின் மத்திய சுல்வேசி பகுதியில் புகழ்பெற்ற ஏரி ஒன்று உள்ளது. இதில் மரைன் என்ற முதலை நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறது. சுமார் 13 அடி நீளமுள்ள அந்த முதலை 2016ம் ஆண்டுவாக்கில் ஏரியில் மிதந்த டயர் ஒன்று அதன் தலையில் மாட்டிகொண்டது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


சுமார் நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த டயர் இன்னமும் முதலையின் கழுத்திலேயே இருக்கிறது. இதனால் முதலைக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் விலங்கு நல அமைப்பு ஒன்று முதலையின் கழுத்தில் மாட்டியிருக்கும் டயரை எடுப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் முதலைக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT