Skip to main content

முதலையின் கழுத்தில் சிக்கிய டயரை எடுத்தால் ரொக்கப்பரிசு!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

இந்தோனேஷியாவில் பைக் டயரில் சிக்கியிருக்கும் முதலையிடம் இருந்து டயரை வெளியே எடுத்தால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவின் மத்திய சுல்வேசி பகுதியில் புகழ்பெற்ற ஏரி ஒன்று உள்ளது. இதில் மரைன் என்ற முதலை நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறது.  சுமார் 13 அடி நீளமுள்ள அந்த முதலை 2016ம் ஆண்டுவாக்கில் ஏரியில் மிதந்த டயர் ஒன்று அதன் தலையில் மாட்டிகொண்டது. 
 

jk



சுமார் நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த டயர் இன்னமும் முதலையின் கழுத்திலேயே இருக்கிறது. இதனால் முதலைக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் விலங்கு நல அமைப்பு ஒன்று முதலையின் கழுத்தில் மாட்டியிருக்கும் டயரை எடுப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் முதலைக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் அருகே வீட்டிற்குள் புகுந்த முதலை!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
 crocodile entered a house near Chidambaram

சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் வசிப்பவர் அப்துல் ரஷீத். இவரது வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இவர் அதிகாலையில் எழுந்து வெளியே வந்தபோது வீட்டு வாசலில் முதலையைப் பார்த்துள்ளார். முதலையைப் பார்த்து சத்தம் போட்டதால் உடனடியாக குடும்பத்தினர் அனைவரும் எழுந்து கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முதலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சிதம்பரம் வனவர் பிரபு தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்து 8 அடி நீளமும் 110 கிலோ எடையும் கொண்ட முதலையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து முதலையைப் பத்திரமாக சிதம்பரம் அருகே உள்ள வக்ரமாரி ஏரியில் விட்டனர். முதலையைப் பிடித்ததால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். 

Next Story

துரத்திய நாய்; பயந்து தண்ணீரில் இறங்கிய முதலை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
The dog that chased the crocodile; A scared crocodile got into the water

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக கனமழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறு, குளம் மற்றும் வாய்க்கால்கள் நிரம்பி வழிகிறது. இதனையொட்டி சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தின் அருகே ஓடும் வாய்க்காலில் அதிகளவு மழை நீர் செல்கிறது.

இந்நிலையில் இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரில் முதலைக்குட்டி ஒன்று அடித்து வந்துள்ளது. இந்த முதலை குட்டி வாய்க்காலின் கரையில் வியாழக்கிழமை மதியம் இரைதேடி படுத்திருந்துள்ளது. இதனை வாய்க்கால் கரையில் வந்த நாய் ஒன்று பார்த்து முதலையை கவ்வி பிடிக்க ஓடியது.  முதலை குட்டி நாய் வருவதை அறிந்து பயந்து போய் வாய்க்கால் தண்ணீரில் இறங்கியது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் வாய்க்கால் மற்றும் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் முதலை மற்றும் முதலை குட்டிகள் தங்கி இருக்கும் வாய்ப்பு உள்ளது எனவே பொதுமக்கள் கால்நடைகள் வாய்க்காலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.