Advertisment

எலான் மஸ்க் மீது வழக்கு!

Elon Musk tweets

உலகின் பிரபலமான சமூக ஊடகமான ட்விட்டரை, நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் கடந்த மே மாதம் வாங்குவதற்காக 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து இன்னும் ஆறு மாதங்களில் ட்விட்டரின் முழு கட்டுப்பாடும் எலான் மஸ்க் வசம் வரும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.

Advertisment

ஆனால் இறுதியில் திடீரென ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்த எலான், போலி கணக்குகள் அதிகம் இருப்பதாகக் கூறி டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்டார். ஏற்கனவே கோலா, மெக்டொனால் போன்ற நிறுவனங்களை வாங்குவதாக விளையாட்டாக எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்திருந்தது போன்றே ட்விட்டரை வாங்கும் செய்தியும் விளையாட்டாகவே முடிந்தது.

Advertisment

இந்நிலையில் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஒப்பந்தத்தில் அனுமதித்த 44 பில்லியன் அமெரிக்க டாலரில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உத்தரவிட வேண்டும் என அமரிக்காவின் டெலவர் நீதிமன்றத்தில் ட்விட்டர் வழக்கு தொடர்ந்துள்ளது.

twitter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe