Advertisment

ஊர் சுற்றுவதற்காகக் கணவரைச் செல்லப்பிராணி ஆக்கிய மனைவி... மடக்கிப் பிடித்த போலீஸார்...

canadian woman walks on street with leash on husdand

ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றுவதற்காகப் பெண் ஒருவர் தனது கணவரை நாய் போல வாக்கிங் கூட்டிச்சென்ற சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.

Advertisment

கனடாவின் கியூபெக் நகரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இரவு எட்டு மணி முதல் அதிகாலை ஐந்து மணிவரை மக்கள் சாலைகளில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவசர காரணங்களுக்காகப் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் செல்லப் பிராணிகளை வாக்கிங் கூட்டிச்செல்பவர்கள் மட்டும் இந்த ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்தச் சூழலில், கியூபெக்கின் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அவரது கணவருடன் ஊரடங்கு நேரத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது, அவரது கணவரின் கழுத்தில் நாயைப் போலச் சங்கிலியை மாட்டி, அதனைப் பிடித்தபடி அவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் ஊரடங்கு விதிகளை மீறுவதைக் கண்ட போலீஸார், அவரை மடக்கிப் பிடித்துக் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண், "சட்டப்படி செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் வாக்கிங் செல்லலாம். அதைத்தான் நான் செய்கிறேன்” என போலீஸாருக்குப் பதிலளித்துள்ளார். பெண்ணின் பதிலைக் கேட்டு அதிர்ந்துபோன காவலர்கள், அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து ரூ. 1.72 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.

Canada corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe