/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/canadaindisa.jpg)
இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பஞ்சாப்பில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த நிஜ்ஜார் தலைமையிலான காலிஸ்தான் பயங்கரவாதிகள், தனி நாடு கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவரது படுகொலைக்கு, இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்க, அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்தது.
நிஜ்ஜார் படுகொலையில் கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு புகார் அளித்தது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தது. மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் 6 பேர் வெளியேற்றி, இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவில் மோதல் போக்கு ஏற்படது.
இதற்கிடையில், ட்ரூடோ கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது ஜனவரி மாதம் 27ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், நாடு முழுவதும் ஆதரவு சரிவருவதால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியிலிருந்தும் லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், கனடா தேர்தல் நடைமுறைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த விசாரிக்க கடந்த 2023ஆம் ஆண்டில் அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்ட ஆணையம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற பிரதமரின் குற்றச்சாட்டை தொடர்ந்து கனடாவுக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. ஆனால், நிஜ்ஜார் கொலையில் இந்தியா உள்பட, வெளிநாட்டு நாட்டுடனான உறுதியான தொடர்பு நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)