gfcx

Advertisment

தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் அதிகம் வாழும் துபாய், சிங்கப்பூர், மலேஷியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கனடா வாழ் தமிழர்களோடு பொங்கல் கொண்டாடிய விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.