CANADA

Advertisment

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை தீவிரமானதையடுத்து, இந்தியாவில் இருந்து தங்கள் நாடுகளுக்கு கரோனாபரவமால்தடுக்க நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இந்தியாவில் இருந்துவரும் பயணிகள் விமானங்களுக்குத் தடை விதித்தன. அதேபோல் பாகிஸ்தானிலும் கரோனா அதிகரித்துவந்ததால்கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்குத் தடை விதித்தன.

இந்தநிலையில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து தங்கள் நாட்டுக்கு பயணிகள் வருவதற்கான தடையைக் கனடா 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இதன்மூலம் ஜூன் 21ஆம் தேதிவரை, இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பயணிகள் யாரும் கனடா செல்ல முடியாது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்துவரும் பயணிகள் விமானத்திற்குத் தடை விதிக்கப்பட்டதிலிருந்து, கனடாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் கரோனாபாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

மேலும், கரோனாவிலிருந்து கனடா நாட்டினரைப் பாதுகாக்கவும், வெளிநாட்டிலிருந்து கனடாவிற்குள் கரோனா, மரபணு மாற்றமடைந்த கரோனாக்கள் கனடாவிற்குள் பரவும்ஆபத்தைக் கையாளுவதற்காகவும் இந்தத் தடை அமலில் இருக்கும் எனவும் அந்தநாடு கூறியுள்ளது.