Skip to main content

புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுத்த கழுகு!

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஸ்டீவ் பைரோ. இவர் இயற்கை சார்ந்த இடங்கள் மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஆவார். இவர் அண்மையில் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு சென்றிருந்தார். அவர் அங்குள்ள பறவைகளை விதவிதமாக புகைப்படம் எடுத்தார். அப்போது, 'புரூஸ்' என பெயரிடப்பட்ட கழுகு ஒன்றை புகைப்படம் எடுக்க தயார் ஆனார். பொதுவாக இது போன்ற புகைப்படங்களை எடுக்கும் போது, பறவைகள் அந்த இடத்தில் இருந்து பறந்து சென்று விடும் அல்லது அப்படியே இருக்கும். ஆனால் 'புரூஸ்' கழுகு, ஸ்டீவ் பைரோ தன்னை புகைப்படம் எடுப்பதை அறிந்தது, அவரை நோக்கி பறந்து வந்தது. நேர்கொண்ட பார்வையுடன், 2 இறக்கையும் தண்ணீரில் உரசிய படி ‘போஸ்’ கொடுப்பது போல் நேர்த்தியாக பறந்து வந்த போது, ஸ்டீவ் பைரோ அதனை தத்ரூபமாக படம் பிடித்தார்.

 

 

 

EAGLE

 

அதன் பின்னர், அவர் அந்த புகைப்படத்தை 'பேஸ்புக்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் ஸ்டீவ் பைரோவுக்கு பேரும், புகழும் கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், “இந்த புகைப்படம் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்பதை நான் இன்னும் அறியவில்லை” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனுலாம் வேஸ்ட்.. ஒட்றா போஸ்டர... அன்பு குழுவின் அலப்பறை!

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

poster has been put up in Tirunelveli asking to control the stray dogs

 

அண்மை காலமாக தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தெரு நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக வலம் வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலையில் பள்ளி செல்லும் சிறுவர்கள் தொடங்கி ஓய்விற்காக நடைபயிற்சி செய்யும் பெரியவர்கள் வரை அனைவரையும் நாய்கள் ஒன்றாக திரண்டு விரட்டுகிறது. மேலும் பலரை கடித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படியான சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. 

 

அந்த வகையில் சமீபத்தில் சென்னை ராயபுரத்தில் தெரு நாய் ஒன்று பள்ளி மாணவர்கள் உட்பட 28 பேரை கடித்தது. தொடர்ந்து பலரையும் கடிக்க முயன்றதால் அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர். அந்த நாயை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் நாய்க்கு வெறிநாய்(ரேபிஸ்) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து  அந்த நாய் கடித்தவர்களுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி வெறிநாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு இடங்களில் தெருநாய்களின் பிரச்சனை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிகை வைத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் திருநெல்வேலியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்தக் கோரி, மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. திருநெல்வேலி 36 வது வார்டை கலக்கிக் கொண்டிருக்கும் ‘அன்பு’ குழுவின் உறுப்பினர்கள் என்று தொடங்கும் அந்த போஸ்டரில், “ பெயர் - புன்னிய மூர்த்தி, வயது - 5மாதங்கள், குணம் - சண்டை இழுத்தல், கடிபட்டவர்கள் - 1; பெயர் - கலத்தூர் தட்சணா மூர்த்தி, வயது - 3, குணம் - கடித்து வைத்தல், கடிபட்டவர்கள் - 16 பேர்; பெயர் - வழுவகுடி சுந்தர மூர்த்தி, வயது - 3, குணம் - ஆண்களை மட்டும் குறிவைத்து விரட்டுதல், கடிபட்டவர்கள் - 6 பேர்; பெயர் - கலத்தூர் காலனிதெரு சத்தியமூர்த்தி, வயது - 4, குணம் - சங்க தலைவனாக பாவித்தல்; கடிபட்டவர்கள் - 10 பேர்; பெயர் - வேலக்குடி ராம் மூர்த்தி, வயது - 5, குணம் - பதுங்கி இருந்து விரட்டுதல்; கடிபட்டவர்கள் - குறிப்பிடப்படவில்லை” என்று நாய்களையும் சேர்த்து புகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் அந்த போஸ்டரில், “இவர்களை கட்டுப்படுத்த பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வார்டு உறுப்பினர் மற்றும் நிர்வாகத்திற்கு எங்களது கோடான கோடி நன்றிகள்...” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

Next Story

சோதனை சாவடியில் கார் வெடித்து விபத்து; 2 பேர் உயிரிழப்பு

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Car on bridge accident; 2 people lost their lives in america

 

பாலத்தில் வந்த கார் திடீரென்று வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அமெரிக்கா நாட்டிற்கும், கனடா நாட்டிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சி அருகே ரெயின்போ பாலம் உள்ளது. இதன் அருகே அமெரிக்கா - கனடா எல்லை சோதனை சாவடி இருக்கிறது. இங்கு வரும் வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்த போது அங்கு வந்த கார் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. உடனே, இதனை பார்த்த அதிகாரிகள், அங்கு சென்று பார்த்த போது, அந்த காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தனர். 

 

பாலத்தின் எல்லையில் வந்த வாகனம் ஒன்று வெடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் புலன் விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த இந்த கார் வெடிப்பு சம்பவத்தை நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.