Advertisment

துப்பாக்கிச் சூடு சம்பவம்; ஐந்து பேர் பலி

canada apartment canada apartment issue police involved  issue police involved  

கனடாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில்நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரோண்டோ நகரில் அமைந்துள்ள குடியிருப்புஒன்றிற்குஅடையாளம் தெரியாத மர்ம நபர்ஒருவர் வந்துள்ளார். அவர் திடீரென்று தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தமக்கள் மீதுதுப்பாக்கிச் சூடுநடத்தினார். துப்பாக்கி சுடும் சத்தம்கேட்டபொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளனர்.

Advertisment

இது குறித்த தகவல் கிடைத்த போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தத்துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியானதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். எதற்காகஇந்தச் சம்பவம் நடைபெற்றது என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியான சம்பவம் கனடாவில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

police Canada
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe